கோலாலம்பூர்:
காசா மக்களுக்கு மனிதநேய உதவிகளை விநியோகிக்க முனைந்த ஜிஎஸ்எப் தன்னார்வலர்களை இஸ்ரேல் தரப்பு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மஇகா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் தரப்பு செயல் மனித நேயமற்றது. மேலும் சட்டத்திற்கு புறம்பானது என்று அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சாடினார்.
எனவே அந்த தன்னார்வலர் குழுவை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.
அதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலமையிலான அரசாங்கம் உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு ஐநா. அனைத்துலக இஸ்லாமிய கூட்டமைப்பு வாயிலாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அரசாங்கம் முனைய வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.