புதுடெல்லி:உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தும் அவர், சுகோய்-57 ரக போர் விமான விற்பனை, எஸ்- 400 ஏவுகணைகள் டெலிவிரி ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.