பெங்களூரு,காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காய்ச்சல் காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மல்லிகார்ஜுன கார்கே வரும் 7-ந்தேதி நாகாலாந்து மாநிலம் கோஹிமா பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தின்போது நாகாலாந்து மட்டுமின்றி, அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் அரசியல், பொருளாதார நிலை குறித்து மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.