Offline
Menu
சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா – அப்ஸா ஃபாடினி திருமணம் விமரிசையாக நடைபெற்றது
By Administrator
Published on 10/03/2025 09:00
News

கோலாலம்பூர்:

சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா மற்றும் டத்தின் படுக்கா ஸ்ரீ அப்ஸா ஃபாடினி டத்தோ அப்துல் அஜிஸ் ஆகியோரின் திருமணம் இன்று பாரம்பரிய முறைப்படி இனிதே நடைபெற்றது.

அரச திருமண ஊர்வலம் இன்று காலை சுல்தான் அப்துல் அஜிஸ் அரச கேலரியில் தொடங்கியது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்ணமயமான உடைகளுடன் திரளாகக் கூடிச் சிறப்பு நாளை கண்டு ரசித்தனர்.

காலை 10.05 மணிக்கு, இஸ்தானா ஆலம் ஷாவில் திருமண விழா உச்சக்கட்டத்தை எட்டியது.

அதனை முன்னிட்டு 11 பீரங்கி குண்டுகள் முழங்கிய மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த விழாவில், அரச குடும்பத்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Comments