இஸ்லாமபாட்:
பாக்கிஸ்தானை உட்படுத்திய காஷ்மீர் பகுதியில் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர போராட்டத்தில் இதுவரை 8 பேர் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசியல்வாதிகள், அரசாங்க முதன்மை அதிகாரிகளுக்கான சிறப்பு உரிமை மீதான மக்கள் கொந்தளிப்பின் காரணமாக இந்த போராட்டம் வெடித்தது.
இது தவிர உள்ளூர் சட்ட அமைப்பின் மீதும் ஏற்பட்ட அதிருப்தியும் இந்த போராட்டத்திற்கு காரணமானது.
இதனையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி ஆயிரக்கணக்கானோர் முஸாஃபாராபாட் நகரில் கூடினர். இதனால் அமலாக்க தரப்பினர் அந்த பகுதியில் தொலைபேசி, இணைய தொடர்பை துண்டித்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 5 பொதுமக்களும் 3 போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.