கோலா சிலாங்கூர்:
கேங் TR எனப்படும் குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் மீது இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி நூருல் மார்டியா முன்னிலையில் மொழிப்பெயர்ப்பாளர் குற்றப்பத்திரிக்கையை வாசித்ததும் எஸ். சுகுமாறன் (வயது 45), எஸ். ராஜா (வயது 27), எம். தேவகுமரன் (வயது 44), எம். முகிலன் (வயது 35) ஆகிய அந்த நால்வரும் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர்.
ஆனாலும் இந்த குற்றச்சாட்டு 2012 (சிறப்பு நடவடிக்கை) பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சொஸ்மா) கீழ் வருவதால் அந்த நால்வரிடமும் வாக்குமூலம் ஏதும் பெறப்படவில்லை.
அந்த நால்வரும் கடந்த 2019 நவம்பர் தொடங்கி கடந்த மாதத்திற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அந்த குண்டர் கும்பல் உறுப்பினரான செயல்ப்பட்டு வந்ததாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு மறு விசாரணை தேதியை கிள்ளான் உயர் நீதிமன்றம் உறுதிச் செய்யும் என நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையில் டிபிபி தரப்பில் வழக்கறிஞர் ஷாஃபிக் ஹாசிம், லினா ஹனினி ஆகியோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.