கோலாலம்பூர்,
அடுத்த வாரம் லாவோஸ் அணிக்கு எதிரான 2027 ஆசியா கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் 7 நடுநிலை ஆட்டக்காரர்கள் தேசிய அணியில் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிமாவ் மலாயா அணியில் இடம்பெறும் ஆட்டக்காரர்கள் பட்டியலில் அந்த எழுவரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
முன்னதாக பீபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் வழங்கிய தண்டனை தொடர்பிலான மேல்முறையீடு செயல்பாடுகள் இன்னமுன் நிறைவு பெறாததால் இந்த ஆட்டத்தில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் அந்த எழுவருக்கு பதிலாக வேறு நடுநிலை ஆட்டக்காரர்கள் களம் இறக்கப்படுவர் என்றும் கூறப்படுகின்றது.