கோலாலம்பூர்:
நாட்டில் 2.8 மில்லியனுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் மைடிஜிட்டல் ஐடி செயலியில் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மைபாயார் பிடிஆர்எம், மைஜேபிஜே உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட அரசாங்க, தனியார் தளங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மேலும் நாட்டில் டிஜிட்டல் சூழலில் நம்பிக்கை- பாதுகாப்பை வலுப்படுத்துவது, சிம் அட்டை வாங்குவது போன்ற செயல்பாடுகளிலும் இந்த மைடிஜிட்டல் ஐடி செயலி பதிவு கட்டாயமாக்கப்படுகின்றது.
அதோடு தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுதுவதோடு அரசாங்க சேவைகளை ஒருங்கிணைத்து நவீனப்படுத்த அமைச்சரவை இவ்வாண்டு தேசிய பொது கணினிமய கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதே சமயம், மைடிஜிட்டல் ஐடி செயலி உடன் ஒருங்கிணைக்கபடவுள்ள தளங்கள் வாயிலாக அரசாங்க சேவை ‘கதவு’கள் அமலாக்கத்தையும் டிஜிட்டல் துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்த முதன்மை முன்னெடுப்புகள் மக்களுக்கு அரசாங்க சேவைகள் எளிதாக கிடைக்க வகை செய்யும்.
குறிப்பாக 2030ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சுமார் 95 விழுக்காட்டு அரசாங்க சேவைகள் ஆன்லைனில் பெறக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.