Offline
Menu
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு 2 பேரைக் கடத்த முயன்ற இளைஞருக்கு சிறை
By Administrator
Published on 10/04/2025 09:00
News

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் 20 வயதான ஓட்டுநர் முகமட் இஸ்ஸுல் இஸ்லாம் அப்துல் ஹக் என்ற ஆடவர், காரின் டிக்கியில் இருவரை மறைத்து மலேசியாவுக்கு கடத்த முயன்றதற்காக 10 மாதம் சிறையுடன் 800 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர், கடனை அடைப்பதற்காக ஃபேஸ்புக்கில் “கே” எனும் நபர் வழங்கிய வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். ஒவ்வொருவரையும் கடத்தினால் 500 ரிங்கிட் பணம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

2025 ஜூலை 4-ஆம் தேதி, வாடகை காரில் பயணித்த அவர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார். அப்போது, முகமட் அஸ்யராஃப் (30) மற்றும் முகம்மது இட்ஸுன் ஷஃபி மௌலா அப்துல் ரஸாக் (31) ஆகியோர் காரின் டிக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர் அபராதம் செலுத்தாத பட்சத்தில் ஒரு நாள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், விடுதலையான பின்னர் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் நீதிமன்றம் தடை விதித்தது.

Comments