கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ஜோடி ரகசியத் திருமணத்திற்குத் தயாராகி வருவதாகத் தீயாகச் செய்திகள் பரவின. ஆனால், இரு தரப்புமே இதை முற்றிலுமாக மறுத்துள்ளன.
மிருணாள் தாகூருக்கு நெருக்கமான வட்டாரங்கள், “பிப்ரவரி மாதம் மிருணாள் நடிப்பில் புதிய படம் வெளியாகவுள்ளது. அந்த நேரத்தில் அவர் எப்படித் திருமணத்திற்குத் திட்டமிடுவார்? இது முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி,” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியான கடற்கரை வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “தடுமாறவில்லை, ஜொலிக்கிறேன்” (Grounded, glowing and unshaken) என்ற வாசகத்துடன் வதந்திகளுக்கு மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
தனுஷின் நண்பர்கள் கூறுகையில், தனுஷுக்கு மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், அவர் தனது பிள்ளைகளின் வளர்ச்சியிலும் திரைப்பயணத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிருணாள் தாகூரின் திரைப்பட வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டது மற்றும் அவ்வப்போது இவர்கள் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராமில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டதுமே இத்தகைய காதல் வதந்திகளுக்குக் காரணமாக அமைந்தது.