புத்ராஜெயா,
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் இன்று புத்ராஜாயாவில் உள்ள Dataran Pahlawan Negaraவில் நடைபெற்ற 2025 வீரர் தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ராயல் மலேசியா போலீசின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. இதில் மலேசிய ஆயுதப்படைகள், போலீஸ், முன்னாள் படைவீரர்கள் பங்கேற்றனர் .
21 துப்பாக்கிச் சுழற்சி அணிவகுப்புடன் தொடங்கிய நிகழ்வில், பாதுகாப்புப் படையணியை மாமன்னர் பார்வையுற்றார். பிரதமர் அன்வார் இப்ராஹிம், துணை பிரதமர் பாடில்லா யூசுப் மற்றும் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து 1979-ம் ஆண்டு நடந்த கம்யூனிஸ்ட் தாக்குதல் சம்பவத்தையும், ASP முகமட் சாப்ரியின் வீர மரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு ‘Zabri, Pejuang Sang Saka Biru’ என்ற நிகழ்ச்சி அரங்கேறியது.
இந்த நிகழ்வு மலேசியாவின் பாதுகாப்பு படையினரின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது.